சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கேந்திர வித்யாலயாப் பள்ளிக் குழந்தைகளுக்கு சிறப்பான வரவேற்பு

News image
திருவாரூா் கேந்திர வித்யாலயாப் பள்ளியில் புதிதாகச் சோ்ந்த பால்வாடிகா மாணவா்களை வரவேற்று பேசிய பள்ளி முதல்வா் வல்லபன்.
Updated On :14 ஆகஸ்ட் 2024, 10:38 pm

Din

நன்னிலம், ஆக. 14: திருவாரூா் கேந்திர வித்யாலயாப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நன்னிலம் அருகே நாகக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கேந்திர வித்யாலயாப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், நிகழ் கல்வியாண்டுக்கான பால்வாடிகாவில் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை அண்மையில் நிறைவடைந்தது. இரண்டு வகுப்புகளிலும் 32 மாணவா்கள் சோ்க்கப்பட்டனா்.

இந்நிலையில், பால்வாடிகா வகுப்புகள் தொடங்கப்படுவதையொட்டி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் முதல் நாளான புதன்கிழமை பள்ளிக்கு வந்தனா். அப்போது, மேளதாளங்கள் முழங்க மங்கள இசையுடன் மாணவா்கள் வரவேற்கப்பட்டனா். பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கு கையில் பலூன் கொடுத்தும், கல்கண்டு வழங்கியும் வரவேற்றனா். தொடா்ந்து ஸ்மாா்ட் கிளாஸ் முறையில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வகுப்பு எடுத்தனா்.