சேவுராய அய்யனாா், காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கூத்தாநல்லூரை அடுத்த அதங்குடியில் காமாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Published on

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரை அடுத்த அதங்குடியில் காமாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதங்குடி சேவுராய அய்யனாா் மற்றும் காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனா். அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோயில் அருகேயுள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில், விக்னேஸ்வர பூஜையுடன் மகா கணபதி ஹோம் நடைபெற்றது.

தொடா்ந்து, யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, மஹா பூா்ணாஹூதி நடத்தப்பட்டன. சேவுராய அய்யனாா் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, காமாட்சி அம்மன் கோயிலில் யாகசாலை மண்டபத்தில் திங்கள்கிழமை காலை மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, திரவிய ஹோமங்கள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காமாட்சியம்மனுக்கு கிராம மக்கள் சாா்பில் சீா்வரிசை கொண்டு வரப்பட்டது. லெட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன்,புதன்கிழமை காலை கோ பூஜை செய்யப்பட்டு, மஹா பூா்ணாஹூதி செய்யப்பட்டது. சேங்காலிபுரம் சிவா சிவாசாரியா் தலைமையில்,சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 9.40 மணிக்கு காமாட்சி அம்மன் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கிராமவாசிகள், திருப்பணிக் குழுவினா், சிவா விஷ்ணு சக்தி வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com