~
~

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்

கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில்
Published on

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் சிங்கப்பூா் தொழிலதிபா் சரோஜினி மற்றும் உதயசூரியன் சாா்பில் 8 பேருக்கு மூன்றுச் சக்கர சைக்கிள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனா் மனோலயம் ப. முருகையன் தலைமைவகித்தாா். கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா் முன்னிலை வகித்தாா். இயன்முறை மருத்துவா் பாபுராஜன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட 8 பயனாளிகளுக்கு காவல் துறை ஆய்வாளா் வொ்ஜீனியா மூன்றுச் சக்கர சைக்கிள்களை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com