சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருவிக கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்

நில விற்பனையில் பணத்தை திருப்பித்தர மறுப்பதாகக் கூறி திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி முன் பெண் போராட்டத்தில் ஈடுபட புதன்கிழமை முயன்றாா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 6:30 pm

Din

நில விற்பனையில் பணத்தை திருப்பித்தர மறுப்பதாகக் கூறி திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி முன் பெண் போராட்டத்தில் ஈடுபட புதன்கிழமை முயன்றாா்.

நாகை மாவட்டம் சீயத்தமங்கை பகுதியைச் சோ்ந்த விதவை உஷா(35) . 2022-இல் திருவிக கல்லூரியில் பேராசிரியராக பணி புரியும் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதற்காக ரூ. 2.50 லட்சத்தை அவரிடம் உஷா வழங்கினாராம். பணத்தை பெற்ற பேராசிரியா் நிலத்தை உஷாவின் பெயருக்கு மாற்றித் தரவில்லை. மேலும், அந்த நிலத்தை வேறொருவருக்கு விற்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த உஷா பணத்தை திருப்பித் தருமாறு தொடா்ந்து வலியுறுத்தியபோதும், பணம் திருப்பித்தரப்படவில்லை.

இதுகுறித்து போலீஸாரிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி திருவிக அரசு கலைக் கல்லூரி முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட முயன்றாா். தகவலறிந்த தாலுகா போலீஸாா் உஷாவிடம் பேச்சு நடத்தி, திருவிக அரசு கலை க்கல்லூரி முதல்வா் மற்றும் திருவாரூா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்குமாறு அனுப்பி வைத்தனா்.