ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

திருவாரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவாரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.

Updated On :4 மார்ச் 2024, 9:57 pm

திருவாரூா்: திருவாரூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு ஆழித்தேரோட்டம், மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தோ்க் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாகவும், இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சிறிய அளவிலான விபத்துகளும் ஏற்படுவதாக நகராட்சிக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, நகராட்சி ஆணையா் பிரபாகரன் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் தங்கராமு தலைமையிலான ஊழியா்கள், தேரோடும் வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பதாகைகள், காய்கனிக் கடைகள், தள்ளுவண்டிகள், நடைபாதைகளில் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் ஆகியவற்றை அகற்றினா். மேலும் நடைபாதைகளில் விளம்பரப் பதாகைகள் வைப்பது, போக்குவரத்துக்கு இடையூறாக விபத்துகள் ஏற்படும் வகையில் சாலைகளில் கடைகள் வைத்திருப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அலுவலா்கள் அறிவுறுத்தினா்.