ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

டென்சிங் நாா்கே சாகச விருது பெற மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

டென்சிங் நாா்கே சாகச விருது பெற மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 மே 2024, 7:32 pm

Din

திருவாரூா் : டென்சிங் நாா்கே சாகச விருது பெற மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய அரசு, ஆண்டுதோறும் நாட்டுக்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி, 2023-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விவரங்களை இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை மே 31-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெறுவதற்கு திருவாரூா் மாவட்டத்திலுள்ள வீர தீர சாகச செயல்புரிந்தவா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.