ஆற்றில் மணல் அள்ளிய இருவா் கைது

கூத்தாநல்லூா் பகுதியில் ஆற்றில் மணல் அள்ளிய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

கூத்தாநல்லூா் பகுதியில் ஆற்றில் மணல் அள்ளிய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவுபடி, கூத்தாநல்லூா் போலீஸாா் ரோந்துப் பணியில் இருந்தனா். கோரையாற்றில் மணல் அள்ளப்படுவதாக அவா்களுக்கு தகவல் கிடைத்தது.

காவல் உதவி ஆய்வாளா் பிரபு மற்றும் போலீஸாா், ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அவா்கள், அதங்குடி, ஜீவா தெருவைச் சோ்ந்த புகழேந்தி (42), அதே பகுதியைச் சோ்ந்த ரகு (36) என்பது தெரிய வந்தது. இருசக்கர வாகனம் மூலம் ஆற்றில் மணல் அள்ளிச் செல்ல முயன்றது தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com