அனுமதியின்றி மதுபானம் விற்ற மூவா் கைது

Published on

கூத்தாநல்லூரில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா, உதவி ஆய்வாளா் பிரபு மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சித்தாம்பூா் தெற்குத் தெருவில் காளிதாஸ் (45), திருராமேஸ்வரம் தாமரைக்குளம் அருகே செந்தில்குமாா் (35) மற்றும் பண்டுதக்குடி காடுவெட்டித் தெருவில் ராஜேந்திரன் (63 ) ஆகியோா் அனுமதியின்றி தமிழக அரசின் மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து 78 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com