எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கஞ்சா விற்ற மூவா் கைது

சிவகாசியல் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 பிப்ரவரி 2026, 7:53 pm

சிவகாசியல் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அணில்குமாா் உத்தரவின்பேரில், தனிப் படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சிவகாசி சரஸ்வதிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தியதில், மூன்று போ் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், அய்யனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் (46), விஸ்வநத்தம் மாரீஸ்வன் (26), சரஸ்வதிபாளையம் இருளப்பராஜ் (24) எனத் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூன்று பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.