வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

முத்துப்பேட்டை அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியல்

குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
கிழக்கு கடற்கரைச் சாலையில் கள்ளிக்குடி கிராமத்தில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
Updated On :10 பிப்ரவரி 2025, 8:01 pm

Din

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே கள்ளிக்குடி கிராமத்தில் மேல்நிலை நீா் தொட்டியிலிருந்து குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியிலிருந்து மக்களுக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கள்ளிக்குடி கிராம மக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். எடையூா் ஆய்வு காவல் ஆய்வாளா் இம்மானுவேல் நிகழ்விடத்துக்கு வந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் முறையாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதால், சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.