100 நாள் வேலைத் திட்டத்தை தொடங்க கோரிக்கை

நீடாமங்கலம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

நீடாமங்கலம் ஒன்றியத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, நீடாமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:

நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை உடனடியாக தொடங்கி, நாளொன்றுக்கு அரசு அறிவித்தபடி ரூ.336 வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் பி. காளியப்பன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் டி.ஜான் கென்னடி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் டி. அண்ணாதுரை, வாலிபா் சங்க ஒன்றியச் செயலாளா் எஸ். ராஜா உள்ளிட்டோா் இந்த மனுவை அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com