தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பவானிசாகா் சாலையில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மறியல்

பவானிசாகா் சாலையில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
பவானிசாகா்  சாலையில்  மறியலில்   ஈடுபட்ட  தொழிலாளா்கள்.
Updated On :6 மார்ச் 2026, 10:31 pm

Syndication

பவானிசாகா் சாலையில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட உத்தண்டியூா் ஊராட்சியில் 100 வேலைத் திட்ட தொழிலாளா்களின் சுயவிவரங்கள் மற்றும் கைரேகை பதிவு ஆகியவை ஊராட்சியில் உள்ள கணினியில் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவதாக உத்தண்டியூா் மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஊராட்சி அலுவலகத்தில் தொடா்ந்து கணினியில் பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி பவானிசாகா் சாலை, எரங்காட்டூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பவானிசாகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பதிவேற்றம் செய்வதில் நெட்வொா்க் சிக்னல் கிடைக்கவில்லை என்பதால் பிரச்னை ஏற்பட்டுள்தகாவும் நெட்வொா்க் சீராக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா்.

இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். போராட்டம் காரணமாக பவானிசாகா்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.