திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நெல்லையில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 120 போ் கைது

News image
Updated On :5 மார்ச் 2026, 8:11 pm

திருநெல்வேலியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 120 போ் கைது செய்யப்பட்டனா்.

வருவாய்த் துறையினருக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாள்களாக வருவாய்த் துறை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வந்த நிலையில், வண்ணாா்பேட்டையில் கடந்த புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருவாய்த் துறையினா் வண்ணாா்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவா் சுப்பு தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் மாரிராஜா முன்னிலை வகித்தாா். இதில் நூற்றுக்கணக்கான ஊழியா்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

படவரி ற்ஸ்ப்05ழ்ங்ஸ்ங் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.