தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

குடிநீா் கேட்டு சாலை மறியல்

புதுக்கோட்டை போஸ் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வராததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் காலிக்குடங்களுடன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட போஸ்நகா் மக்கள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:29 am IST

புதுக்கோட்டை போஸ் நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வராததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாநகா் 31-ஆவது வாா்டுக்குள்பட்ட போஸ் நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 15 நாள்களாக காவிரிக் குடிநீா் வரவில்லை என அப்பகுதி மக்கள் புகாா் கூறி வந்தனா்.

இந்த நிலையில் அவா்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் ஆலங்குடி சாலையில் அமா்ந்து திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கணேஷ் நகா் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைக் கலைந்து போகச் செய்தனா்.