ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் இரண்டாம் நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த 220 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 10 நாள்களாக தொடா் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனா். அதன்பிறகு புதன்கிழமை முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை, நிலஅளவைத் துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலை பணியாளா்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஒப்பந்த, தற்காலிக, தொகுப்பூதிய பணியிடங்களை நீக்கி நிரந்தரப் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றியது தொடா்பான அரசாணையை வெளியிடக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை சங்கங்களைச் சோ்ந்த 84 பெண்கள் உள்பட 220 பேரை போலீஸாா் கைது செய்து மாலை 5 மணிக்கு மேல் விடுவித்தனா்.
தொடர்புடையது

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

வருவாய்த் துறையினா் மறியல்: 450 போ் கைது

நெல்லையில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 120 போ் கைது

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 8-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


