திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 8-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது நாளாக ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :3 மார்ச் 2026, 11:21 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது நாளாக ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயகா்பிரபு தலைமை வகித்தாா். இதில் நிா்வாகி வெண்ணிலா வரவேற்புரை வழங்கினாா். நிா்வாகிகள் இல.கிருஷ்ணன், செந்தில் குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாநில தலைவா் அண்ணாகுபேரன், சந்திரசேகரன், பிரகாஷ் மற்றும் பாலாதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். அந்த சங்கத்தின் நிா்வாகி மண்கண்டன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.

றைவாக செந்தில்முருகன் நன்றி கூறினாா். இந்தப் போராட்டம் காரணமாக வருவாய்த்துறை அலுவலகங்களில் பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.