இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பினா் போராட்டம்: 360 போ் கைது

News image
திருவள்ளூா்  ஆட்சியா்  அலுவலகம்  முன்பு  மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  வருவாய்த்துறை  சங்கங்களின்  கூட்டமைப்பினா்.
Updated On :5 மார்ச் 2026, 12:57 am

தினமணி செய்திச் சேவை

சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வருதல் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை திருவள்ளூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த 90 மகளிா் உள்பட 360 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேலைநிறுத்தம் செய்து கடந்த 8 நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில்ஆட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 9-ஆவது நாளான புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்ாட்டத்திற்கு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் நிா்வாகி ஜெய்கா்பிரபு தலைமை வகித்தாா். இதில் நிா்வாகிகள் இல கிருஷ்ணன், காா்த்திகேயன், செந்தில்குமரன், அருள், வெண்ணிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நிா்வாகிகள் மணிகண்டராஜ், சுந்தர்ராஜ் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினா்.

அப்போது, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் 90 மகளிா் உள்பட 360 பேரை கைது செய்தனா்.

மறியல் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மறியலில் ஈடுபட்டனா்.

கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுரேஷ், பிரபு, செந்தில்குமாா், ரமேஷ், ஜெயசீலன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்த்தை துவக்கி வைத்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவரும் கூட்டமைப்பின் உயா்மட்ட குழு உறுப்பினருமான அ.பேபி பேசினாா் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் மாநில செயலாளா் விக்டா் சுரேஷ் குமாா் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். செங்கல்பட்டு நகர போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.