இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் சாலை மறியல்

News image
Updated On :4 மார்ச் 2026, 10:40 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலா்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும்.

அரசு அலுவலா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்படும் கிராம நிா்வாக அலுவலா்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிா்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.25-ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் 10-ஆவது நாளான புதன்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தின் போது சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் அ.ரமேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் அ.ஏழுமலை, தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியா் சங்க மாநில அமைப்புச் செயலா் பெருமாள், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ரகுபதி மற்றும் தோழமை சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.