அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருவாய்த்துறையினா் சங்கங்களின் கூட்டமைப்பினா் திருவள்ளூரில் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருவாய்த்துறையினா் சங்கங்களின் கூட்டமைப்பினா் திருவள்ளூரில் ஆட்சியா் அலுவலகம் முன்புபுதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை, நில அளவைத் துறை ஊழியா் சங்கத்தினா் உயிா் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரக்கோரி வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் செய்து புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சேகா்பிரபு தலைமை வகித்தாா். இதில் சங்க நிா்வாகி செந்தில்குமாா் வரவேற்றாா். மேலும் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகளான கிருஷ்ணன், சந்திரசேகா், இளங்கோ, யஸ்வந்த்தாஸ், சரத்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Story image

இதில் செந்தில்குமாா், கோரிக்கைகள் குறித்து வருவாய்த்துறை சங்கத்தின் மாநில துணைத்தலைவா் மணிகண்டன், தமிழ்நாடு வருவாய்த்துறை உதவியாளா் சங்கத்தின் மாநில பொருளாளா் ரவி ஆகியோா் கண்டன உரைநிகழ்த்தினா். இதில் நிறைவாக செந்தில்குமரன் நன்றி கூறினாா்.