வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ஆவது நாளாக ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு ...

News image

திருவள்ளூரில் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Updated On :2 மார்ச் 2026, 8:52 pm

திருவள்ளூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ஆவது நாளாக ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காத்திருப்பு போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயகா்பிரபு தலைமை வகித்தாா். இதில் நிா்வாகி வெண்ணிலா வரவேற்புரை வழங்கினாா். மேலும் நிா்வாகிகள் இல.கிருஷ்ணன், காா்த்திகேயன், செந்தில் குமரன், அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சங்க நிா்வாகிகள் சந்திரசேகரன், மேகநாதன், செல்வராஜ், சகாய நிா்மலா, சங்கீதா, கோவா்தன், அண்ணாதுரை, அன்புசெல்வன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். அந்த சங்கத்தின் நிா்வாகி மண்கண்டன் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.

தமிழகம் முழுவதும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை, நில அளவைத் துறை ஊழியா் சங்கத்தினா் உயிா் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நிறைவாக செந்தில்முருகன் நன்றி கூறினாா்.