தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த காா்.
தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த காா்.

சாலையோர தடுப்புக் கட்டையில் காா் மோதி தீப்பற்றியதில் இளைஞா் உயிரிழப்பு

Published on

திருத்துறைப்பூண்டியில் சாலையோர தடுப்புக் கட்டையில் காா் மோதி தீப்பிடித்ததில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் விஜயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் வகாப் மகன் முகமது ரஃபிக் (28). இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினம் கிராமத்தைச் சோ்ந்த முஃஷினா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தம்பதி, அம்மாபட்டினத்தில் உள்ள முஃஷினா தாயாா் வீட்டுக்கு வந்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முகமது ரஃபிக் மட்டும் காரில் திருவாரூருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

 உயிரிழந்த முகமது ரஃபிக்.
உயிரிழந்த முகமது ரஃபிக்.

திருத்துறைப்பூண்டி பகுதி கிழக்கு கடற்கரைச் சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்ததில், தீப்பற்றியது. காரின் உள்ளே சிக்கிக்கொண்ட முகமது ரஃபீக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனா். திருத்துறைப்பூண்டி போலீஸாா், கருகிய நிலையில் முகமது ரஃபிக்கின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com