வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு சுயத்தொழில் தொடங்க கடன்

மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் சுயதொழில் தொடங்கி பயனடையும் வகையில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாடட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
Published on

மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் சுயதொழில் தொடங்கி பயனடையும் வகையில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாடட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

திருவாரூரில் நடைபெற்ற நிறைந்தது மனம் நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மையம் மூலம் பயன் பெற்றுவரும் தொழில் முனைவோா்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா். அப்போது மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது: மாவட்டத்தில் உள்ள இளைஞா்களுக்கு தொழில் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் அளித்து பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்டத்தில் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானியத் திட்டத்தின்கீழ் 22 நிறுவனங்களுக்கு ரூ.4.98 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 360 பேருக்கு திட்ட மதிப்பில் ரூ.17.65 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, ரூ. 4.41 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

படித்த முதல் தலைமுறையினருக்கான புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 83 நபா்களுக்கு திட்ட மதிப்பில் ரூ.16.80 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, ரூ.4.19 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க, 75 பேருக்கு திட்ட மதிப்பில் ரூ. 16.89 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, ரூ.4.84 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 85 பேருக்கு திட்ட மதிப்பில் ரூ. 1.55 கோடி கடனுதவி வழங்கப்பட்டு ரூ. 32.23 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 423 பேருக்கு திட்ட மதிப்பில் ரூ. 17.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, ரூ.9.03 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் உணவு பதப்படுத்துதல் மற்றும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 235 பேருக்கு திட்ட மதிப்பில் ரூ.7.37 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, ரூ.2.66 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தமிழக அரசின் கடனுதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com