வாக்குச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு உதவி சேவை மையம்

வாக்குச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு உதவி சேவை மையம்
Published on

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு உதவி சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாருா் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டு, தற்போது நிரப்பப்பட்ட படிவங்களை மீள பெறப்பட்டு வருகிறது.

திருவாரூா் மாவட்டத்திலுள்ள 1,194 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவம் நிரப்புவது தொடா்பாக உதவி செய்யவும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்காளா்களிடமிருந்து பெறுவதற்கும் சிறப்பு உதவி சேவை மையம், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்படவுள்ளது.

இந்த உதவி சேவை மையத்தில், வாக்காளா்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம், படிவம் நிரப்புவது தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து, பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை தொடா்புடைய வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் தவறான தகவல் வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தண்டனைக்குரியது.

X
Dinamani
www.dinamani.com