திருவாரூர்
மன்னாா்குடி கோயிலில் இன்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையடுத்து
மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையடுத்து புதன்கிழமை (நவ.26) பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இக்கோயிலில் 2010-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு எடுத்து அதற்காக தமிழக அரசு ரூ. 2.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட நான்கு கோபுரங்கள் மற்றும் கோயில் வளாகம் முழுவதும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், கும்பாபிஷேகம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, விழாவின் தொடக்கப் பணியாக புதன்கிழமை (நவ.26) காலை 9 மணிக்கு கோயில் வளாகத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
