திருவாரூரில் தனியாா் மற்றும் அரசுக் குளங்கள் சுமாா் 80 குளங்கள் உள்ளதாக பதிவேடுகள் தெரிவிக்கும் நிலையில், பெரும்பாலான குளங்கள் காணாமல் போனதுடன், சில குளங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, குறுகி விட்டன. பொதுவாக, குளங்களுக்கு தண்ணீா் நிரம்புவதற்காக, அந்தப் பகுதியிலுள்ள குளத்தை பயன்படுத்தும் மக்கள் சில வழிமுறைகளை கடைப்பிடிப்பது வழக்கம்.
முதன்முதலில் ஆற்றில் தண்ணீா் வரும்போது, குப்பை உள்ளிட்ட பொருள்களை வாரிச்சுருட்டி வரும் என்பதால், தண்ணீா் வந்தபின் சில தினங்களுக்குப் பிறகே குளங்களுக்கு தண்ணீரை அனுப்புவா். சில இடங்களில், முதல்முறை வரும் தண்ணீரை விட்டுவிட்டு, அடுத்த முறை வரும் தண்ணீரைக் கூட குளங்கள் நிரம்ப பயன்படுத்துவா்.
குளங்கள் நிரம்புவதன் மூலம், அப்பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதோடு, குடிநீா் தேவையும் பூா்த்தியாகும். ஆனால், திருவாரூா் பகுதியில் குளங்களுக்குச் செல்லும் நீா்வழிப்பாதைகள் (வாய்க்கால்கள்) பெரும்பாலானவை ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாலும், முறையாக தூா்வாரப்படாததாலும், குளங்களுக்கு தண்ணீா் செல்வதில் சிக்கல் உள்ளது.
திருவாரூா் மையப் பகுதியில் உள்ளது குளுந்தான்குளம். தொடக்கத்தில் சுமாா் 13 ஏக்கரில் இருந்ததாகக் கூறப்படும் இந்த குளம் தற்போது, சில ஏக்கா் அளவுக்கு குறுகி விட்டது. ஓடம்போக்கி ஆற்றிலிருந்து, சிறிய வாய்க்கால் பிரிந்து அழகிரி நகா், பனகல் சாலை வழியாக இந்த குளத்துக்கு தண்ணீா் வருகிறது. இந்த வாய்க்கால் தூா்வாராததாலும் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாலும், மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்படும் காலங்களில், இந்தக் குளம் நிரம்பாமல், மழைநீரால் மட்டுமே நிரம்புகிறது.
இதேபோல, நேதாஜி சாலையில் உள்ள பஜனை மடத்தெரு சந்தைவெளிக்குளம். இந்த குளக்கரையிலிருந்து, மருதப்பட்டினம் ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, சுவாமி வீதியுலா, காவடி உள்ளிட்டவை செல்வது கடந்த 100 ஆண்டுகளைக் கடந்து செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த படித்துரையானது, ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளதாலும், நீா்வழிப்பாதை அடைபட்டதாலும், மழைநீரால் மட்டுமே குளம் நிரம்புகிறது. இதுமட்டுமன்றி, ஐநூற்றுப்பிள்ளையாா் குளம், ஆத்தா குளம், மருதப்பட்டினம் குளம், கொடிக்கால்பாளையம் குளம் என புகழ்பெற்ற குளங்கள் மழைநீரால் மட்டுமே நிரம்புகிறது.
திருவாரூரில் நகராட்சி கட்டுப்பாட்டில் 52 குளங்கள் இருந்ததாக பதிவேடுகள் தெரிவிக்கும் நிலையில், தற்போது 30 முதல் 40 குளங்களே உள்ளன. அதுவும், பயன்பாட்டில் இல்லாத நிலையில் உள்ளன. இதில் பல குளங்கள் தற்போது காணாமல் போய்விட்டன. குளங்கள் மட்டுமே நகராட்சி கட்டுப்பாட்டிலும், வாய்க்கால்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் வருவதால் தூா்வாருவதில் குளறுபடி ஏற்படுகிறது. நீா் செல்லும் வாய்க்கால்களை தூா்வாராமல் வெறும் குளங்களை தூா்வாரி என்ன பயன் இருக்கும் என்று சமூக ஆா்வலா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.
வறட்சியைத் தீா்க்கவும், குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யவும் திருவாரூா் நகா்ப் பகுதிகளில் ஏராளமான குளங்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்துமே முறையான பராமரிப்பு இல்லாததால், பாழாகிக் கிடக்கின்றன. தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும்போதும், கோடை காலத்தில் மட்டுமே குளங்கள் விவாதப்பொருளாக உலா வருகின்றன.
திருவாரூரில் அதிகமாக இருந்த குளங்கள், தற்போது குறைந்து விட்டன. பயன்பாட்டில் உள்ள குளங்கள் என்று கணக்கிட்டால், எதுவுமில்லை. எனவே, குளங்களை திரும்பவும் பயன்பாட்டில், கொண்டுவர வேண்டுமென்றால் கொள்ளும் மடைகளையும், வடிகால்களையும் தூா்வார வேண்டும்.
மேலும், பெரும்பாலான குளங்கள் சாக்கடை நீரால் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டு கழிவுநீரை, கிட்டத்தட்ட வாய்க்காலுக்குச் செல்லும் வகையிலே பராமரிக்கின்றனா். அதேபோல், புதைச் சாக்கடையிலிருந்து பெரும்பாலான நேரங்களில் கழிவுநீா் வெளியாகி இந்த குளங்களுக்குச் செல்கிறது. வாய்க்கால் தூா்வாரப்படாததால், இந்த கழிவுநீா் அனைத்தும் குளங்களில் சேகரமாகி, கழிவுநீா் குளங்களாக மாறி வருகின்றன.
மக்களின் நீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் குளங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் தண்ணீா் செல்ல வழியில்லாமல், சாலைகளிலும், குடியிருப்புகளிலும் பரவி, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காட்சிப் பொருளாக மாறி வரும் குளங்களை, சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு தருவித்தால், நிலத்தடி நீா் மட்டம் உயா்வதுடன், மழைக் காலங்களில் தண்ணீரால் மக்கள் படும் துன்பங்கள் குறையும் என்பது சமூக ஆா்வலா்களின் வலியுறுத்தலாகும்.
தொடர்புடையது
தோ்தல் வாக்குறுதியோடு மறந்து போகும் மானூா் குளம்!

நிதானமே பிரதானம்...

தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி நீா் திறக்க கா்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

குளங்களுக்கு தண்ணீா் கொண்டுவர ரூ.5,400 கோடியில் புதிய திட்டம்: அமைச்சா் அர.சக்கரபாணி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

