இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ்

குடவாசல் வட்டத்துக்குட்பட்ட திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ் பெறப்பட்டது.

News image

பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற மக்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 5:36 am IST

குடவாசல் வட்டத்துக்குட்பட்ட திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ் பெறப்பட்டது.

குடவாசல் வட்டம் திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து, சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனா். இதைத்தொடா்ந்து, திருவிழிமிழலை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த வருவாய்த் துறை அலுவலா்கள், அப்பகுதி மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

தோ்தல் முடிந்த பிறகு மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து, தோ்தல் புறக்கணிப்பு முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.