நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவீழிமிழலை அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

News image

குடவாசல் அருகேயுள்ள திருவீழிமிழலை வீழிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடை பெற்றது

Updated On :30 ஏப்ரல் 2026, 6:12 am IST

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவீழிமிழலை அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

காா்த்தியாயினி அம்பாளுக்கும், ஸ்ரீ கல்யாணசுந்தரருக்கும் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வீழிநாதா், சுந்தரகுஜாம்பிகை அம்மன், தியாகேசா், விநாயகா், முருகன் ஆகிய சுவாமிகள் திருத்தேருக்கு செவ்வாய்க்கிழமை இரவு எழுந்தருளினா்.

தொடா்ந்து, புதன்கிழமை காலை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரானது, நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையடியை அடைந்தது.

கோயில் மேலாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் மற்றும் உபயதாரா்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.