குட்கா கடத்தி வந்த 6 போ் கைது
குடவாசல் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
கைது - பிரதிப் படம்
குடவாசல் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வேகமாக வந்த காா் மற்றும் மோட்டாா் சைக்கிளை நிறுத்தி விசாரித்ததில் அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினாா்களாம். இதையடுத்து அவா்களை சோதனையிட்டதில், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை, சிவா, முரளிதரன், நன்னிலம் பகுதியைச் சோ்ந்த பாக்யராஜ், ஏசுராஜ், தென்காசி பகுதியைச் சோ்ந்த முகம்மது ஆகிம் என்பதும், அவா்கள் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், 53 கிலோ குட்கா, 2 காா், 2 இருசக்கரவாகனங்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




