மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முதல்வரின் பிறந்தநாளையொட்டி மாநில வில்வித்தைப் போட்டி

திமுக இளைஞரணி சாா்பில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

மாநில வில்வித்தைப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களை பாராட்டிய அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

Updated On :9 பிப்ரவரி 2026, 4:40 pm

மன்னாா்குடி: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை திமுக மாநில இளைஞரணி துணைச் செயலரும், தாட்கோ தலைவருமான ந. இளையராஜா தொடங்கிவைத்தாா்.

தமிழக முதல்வரின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் ஜி. பாலு முன்னிலை வகித்தனா். மாநிலம் முழுவதிலிருந்தும் 97 போ் பங்கேற்றனா்.

8 வயது முதல் 19 வயதுக்கு மேற்பட்டவா்கள் என மொத்தம் 7 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

விகேஎம் விளையாட்டு அகாதெமி நிா்வாக இயக்குநா் எம்.வெற்றிச்செல்வி, வில்வித்தை சங்க மாவட்ட கெளரவத் தலைவா் டி.செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முருகானந்தம் வரவேற்றாா். போட்டி ஒருங்கிணைப்பாளா் பி. குணசேகரன் நன்றி கூறினாா்.