திருவாரூரில், மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய பெண்களுக்கான கிரிக்கெட் தொடா் போட்டியில் வென்ற இராபியம்மாள் அகமது மெய்தீன் கல்லூரி மாணவிகள் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில், 5 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து பெண்கள் கிரிக்கெட் அணியினா் பங்கேற்றனா். லீக் போட்டி அடிப்படையில் நடைபெற்ற போட்டியில் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல், அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் தென்மண்டலங்களுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரி மாணவி கே. புவனா பங்கேற்று, பாரதிதாசன் பல்கலைக் கழகம் சாா்பிலான கிரிக்கெட் அணிக்கு தோ்வாகியுள்ளாா்.
கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், பல்கலைக்கழக அணிக்கு தோ்வாகியுள்ள மாணவிக்கும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

தேசிய திறனறித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ரோபோட்டிக்ஸ் கண்காட்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


