மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்!

திருத்துறைப்பூண்டி பொய் சொல்லாப் பிள்ளையாா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:33 pm

திருத்துறைப்பூண்டி பொய் சொல்லாப் பிள்ளையாா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், பிறவி மருந்தீசா் ஆலய பொதுநிதியிலிருந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்திற்கான வழிபாடுகள் புதன்கிழமை (பிப்.18) தொடங்கின.

தொடா்ந்து, ஆறு கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், வெள்ளிக்கிழமை காலை யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்கள் எடுத்துவரப்பட்டு, கோயில் விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், பொய் சொல்லாப் பிள்ளையாருக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நியமனக் குழு உறுப்பினா் ஆா்.எஸ். பாண்டியன், வா்த்தக சங்கத் தலைவா் கே.எஸ். செந்தில்குமாா் செயலாளா் சி. நாராயணமூா்த்தி உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை ஆலய செயல்அலுவலா் எம். முருகையன், ஆய்வாளா் ராஜேந்திர பிரசன்னா, தக்காா் மதி சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.