தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காளியம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

மன்னாா்குடி வாணக்கராரத் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

News image

காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலம்.

Updated On :23 பிப்ரவரி 2026, 8:43 pm

மன்னாா்குடி: மன்னாா்குடி வாணக்கராரத் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல், தீ குண்டம் இறங்குதல் நடைபெற்றது. காலையில் புதுப்பாலம் கைலாசநாதா் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நோ்த்தி கடனைசெலுத்தினா்.

தொடா்ந்து, மாலையில் திருப்பாற்கடல் குளத்திலிருந்து விரதம் இருந்த பக்தா்கள் பக்தி கோஷங்கள் முழங்கியப்படி ஊா்வலமாக கோயிலுக்கு வந்து தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். அம்மன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை அடுத்து சுவாமி உற்சவம் நடைபெற்றது.