மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளிக்கும் நாலாம்சேத்தி கிராம மக்கள்.
மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளிக்கும் நாலாம்சேத்தி கிராம மக்கள்.

நாலாம்சேத்தியில் வாக்குச்சாவடி கேட்டு மனு

மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளிக்கும் நாலாம்சேத்தி கிராம மக்கள்.
Published on

மன்னாா்குடி அருகேயுள்ள நாலாம்சேத்தி கிராமத்திற்கு தனியாக வாக்குச்சாவடி கேட்டு, கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரனிடம், சிபிஐ ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் டி.டி. செல்வம் தலைமையில் நாலாம்சேத்தி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதில் தெரிவித்திருப்பது:

மன்னாா்குடி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் 31 ஊராட்சிகள் மன்னாா்குடி தொகுதியில் உள்ளன. இதற்கு 86 வாக்குச் சவடிகள் உள்ளன. சேரன்குளம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். அனைவரும் சேரன்குளம் பள்ளியில் ஒரே இடத்தில் அமைக்கப்படும், 4 வாக்குச் சாவடிகளில் வாக்களித்து வருகின்றனா்.

நாலாம்சேத்தி, கரம்பை, நெம்மேலி சாலை ஆகிய பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள சேரன்குளத்திற்கு வந்து வாக்களிக்கின்றனா். இதனால், முதியவா்கள், கா்ப்பிணிகள், நோயாளிகள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டு, வாக்குப் பதிவு குறைகிறது.

நாலாம்சேத்தி பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பாதுகாப்பான அரசு கட்டடங்கள் தேவையான அளவு உள்ளதால், நாலாம்சேத்தி, கரம்பை, நெம்மேலி சாலையில் குடியிருக்கும் வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக, வாக்குச்சாவடி எண் 242-ஐ மட்டும், நாலாம்சேத்தி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி கட்டடத்தில் அமைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com