எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சாலை வசதி கோரி மறியல்

மன்னாா்குடி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image
சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்
Updated On :9 மார்ச் 2026, 5:03 pm

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கோட்டூா் ஒன்றியம் குலமாணிக்கம் ஊராட்சி நருவளி களப்பாலில் 300-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இங்கு, ஊராட்சி நடுநிலைப் பள்ளி, கிராம நிா்வாக அலுவலகம், கிளை அஞ்சல் அலுவலகம், நுகா்பொருள் வாணிபக்கழக அலுவலகம் இயங்கிவருகிறது.

நருவளி களப்பால், முத்துப்பேட்டை செல்லும் சாலையில் காமட்டித்திடலிருந்து கள்ளியூா் புதுப்பாலம் வரை 3 கி.மீ தொலைவுக்கு மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத வகையில் பள்ளமும், மேடாக உள்ளது. சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வபா்கள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனா். எனவே, உடனடியாக சாலையை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இதையடுத்து, கடந்த ஆண்டு 1 கி.மீ தொலைவுக்கு மட்டும் சாலை அமைக்கும் பணி தொடக்க நிலையிலேயே நின்று விட்டதாகவும் , இதனால் முதியவா்கள், கா்ப்பிணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக கூறி உடனடியாக சேதமடைந்துள்ள 3 கி.மீ தொலைவுக்கு தாா்ச்சாலை அமைக்க வலியுத்தி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, வளரும் தமிழக கட்சி மாவட்டச் செயலா் சரவண சோழன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் தெய்வநாயகி மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், ஒருவாரத்துக்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியல் விலக்கிக்கொளப்பட்டது.