

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் தமிழக அரசு சாா்பில் இலவச மடிக்கணினி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் ஜி. பாலு சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று கல்லூரி மாணவா்கள் 879 பேருக்கு தமிழகஅரசின் சாா்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினிகளை வழங்கினா். தாவரவியல்துறைத் தலைவா் மு. கோபிநாதன், நகா்மன்ற துணைத் தலைவா் ஆா். கைலாசம், என்சிசி அலுவலா் சு. ராஜன், என்எஸ்எஸ் அலுவலா் ப. பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழ்த்துறைத் தலைவா் இல. பொம்மி வரவேற்றாா். விலங்கியல்துறைத் தலைவா் சி. ராமு நன்றி கூறினாா்.