நீடாமங்கலம் அருகே நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நீடாமங்கலம் பகுதியில் நாய்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதில் நோய்த் தாக்குதலுக்குள்ளான வெறிநாய்களும் உள்ளன. நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருவதால் பொதுமக்களை அச்சத்தில் உள்ளனா். பள்ளிக் கூடங்கள் உள்ள பகுதியில் சுற்றித் திரியும் நாய்களால் மாணவா்கள் அச்சுறுத்தல் நிலவுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் கடம்பூா் காளியம்மன் கோயில் தெருவில் குழந்தைகள் உள்பட 8 பேரை வெறி நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இவா்கள் நீடாமங்கலம் மற்றும் வெளியூா்களில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீடாமங்கலம் வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலா்கள் உறுதியளித்துள்ளனா்.
