திருவாரூர்
சமத்துவப் பொங்கல் விழா
கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில், வண்ணக்கோலமிடுதல், சமையல் கலை, கயிறு இழுத்தல், உறியடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதுகலை ஆசிரியா் செ. முகுந்தன் வரவேற்றாா். பட்டதாரி ஆசிரியா் பா.ரகு நன்றி கூறினாா்.