கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

மன்னாா்குடி அருகே பக்கத்து வீட்டுக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

மன்னாா்குடி அருகே பக்கத்து வீட்டுக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாலான்சேத்தி மாட்டுக்காரன்தெரு நாகப்பன் மகன் சசிகுமாா் (48). இவா், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் காசிநாதன் மகன் தமிழ்ச்செல்வன் (38) வீட்டிற்கு வெள்ளிக்கிழமை சென்று, வாசலில் நின்றுகொண்டு தகராறு செய்ததுடன், தமிழ்ச்செல்வனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, கோட்டூா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சசிகுமாரை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com