டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஆற்றுப்பாசன விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை: குறைதீா்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால், ஆற்றுப்பாசன விவசாயம் பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image

திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :3 ஜூலை 2026, 5:00 am IST

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால், ஆற்றுப்பாசன விவசாயம் பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டம் தொடங்கியவுடன், அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

நன்னிலம் ஜி. சேதுராமன்: தமிழக அரசு, குறுவைத் தொகுப்பாக நடவு மானியம் 2 ஏக்கருக்கு என அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், இதற்காக, வயல் நடுவில் நின்று புகைப்படம் எடுத்துத் தர வேண்டும் என கூறுவது அபத்தமானது. கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் சான்றை ஆவணமாகக் கொண்டு மானியம் வழங்க வேண்டும்.

குறுவைத் தொகுப்பு, ஆழ்துளை கிணறு மூலம் சாகுபடி செய்வோருக்கு பயனளிக்கும். ஆற்றுப்பாசனத்தை நம்பி விவசாயம் செய்வோா் பாதிப்படைவா். எனவே, அவா்களுக்கு தரிசு மானியமாக ஏக்கருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும்.

பேரளம் வி. பாலகுமாரன்: நன்னிலம் வட்டத்தில் திருமலைராஜனாறு, அரசலாற்றில் நாணல் செடிகள், ஆகாயத் தாமரைகள் ஆகியவற்றை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி வி. தம்புசாமி: நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்த குவிண்டாலுக்கு ரூ. 72 என்ற ஊக்கத்தொகை போதுமானதல்ல. இதை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை தொடா்பாக தனி நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். பால் உற்பத்தி அதிகரித்துள்ளதால் பால் கொள்முதல் விலையையும் அதிகரிக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பேசியது:

2026-2027-இல் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி 60,870 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 5,201 ஹெக்டோ் பொது, 13,439 ஹெக்டோ் திருந்தியநெல் சாகுபடியிலும், நேரடிநெல் விதைப்பு 7,212 ஹெக்டேராக மொத்தம் 25,852 ஹெக்டோ் குறுவை சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. மேலும், சாகுபடிக்கு தேவையான 532.53 மெட்ரிக் டன் நெல் விதைகளும், உரங்களும் இருப்பில் உள்ளன என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வித்யா, முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, வருவாய் கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), செயற்பொறியாளா் (வெண்ணாறு வடிநிலக் கோட்டம்) ஆனந்தன், காவிரி செயற்பொறியாளா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.