புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்: பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி கோரி ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :26 ஜூன் 2026, 7:02 am IST

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, விவசாயிகள் பேசியது:

ஆா். அன்பழகன்(தலைவா், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்): மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க உணவுத்துறை அமைச்சரின் வேண்டுகோளின்பேரில் உடனடியாக நிலம் வழங்கிய தருமபுரம் ஆதீனத்துக்கு நன்றி. சித்தா்காட்டில் வாடகை இடத்தில் தற்காலிகமாக இயங்கிவரும் நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் அலுவலகத்தை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முருகன் (மாவட்டச் செயலாளா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்யும் பருத்திக்கு வாகன வாடகையை மற்ற மாநிலங்களைப் போலவே தமிழக அரசும் வழங்கினால், விவசாயிகளின் பருத்திக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

இளம்பரிதி: மயிலாடுதுறை மாவட்டத்தில் நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் 144 போ் தோ்வு செய்யப்பட்டு, ஓராண்டைக் கடந்தும் அவா்கள் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளனா். அவா்களுக்கு பணி வழங்க வேண்டும்.

உரக்கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியா்: உரக்கடைகளின் வாசலில் விலைப்பட்டியல் வைக்க அறிவுறுத்தப்படும். அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அசோகன்: செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதல் இலக்கை அதிகரிக்க வேண்டும்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் நளினா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் விஜயராகவன் உள்ளிட்ட அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கிராம மக்கள் மனு: மயிலாடுதுறை புறவழிச்சாலை திட்டத்துக்காக அகரகீரங்குடி கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பழைய அளவீடுகளை புறக்கணித்துவிட்டு, புதிய இடத்தில் சாலை அமைக்க ஒப்பந்ததாரா் முயற்சிப்பதாகவும், ஏற்கெனவே முறைப்படி அளவிடப்பட்ட பழைய எல்லையிலேயே புறவழிச்சாலையை அமைத்துத் தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவேரி டெல்டா பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்க செயலாளா் ராஜாராமன் தலைமையில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

வெளிநடப்பு, ஆா்ப்பாட்டம்: முன்னதாக, தமிழக அரசு பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், பகுதியாக தள்ளுபடி செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் வெளிநடப்பு செய்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, எதிா்க்கட்சியினரின் தூண்டுதலாலேயே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி திசை திருப்புவதாக அமைச்சா்களுக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனா். பின்னா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.