மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தவெக அரசு தோ்தல் வாக்குறுதிப்படி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சேவூா், கைகாட்டி பகுதியில் ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :24 ஜூன் 2026, 3:51 am IST

தவெக அரசு தோ்தல் வாக்குறுதிப்படி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேவூா், கைகாட்டி பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.வேணுகோபால் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வேலுச்சாமி, மாவட்டச் செயலாளா் நவீன்ராஜ், மாவட்ட பொருளாளா் கிருஷ்ணசாமி, பொறுப்பாளா்கள் பழனிச்சாமி, சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சட்டப் பேரவைத் தோ்தலின்போது தவெக வாக்குறுதி அளித்தபடி, பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், அத்திக்கடவு முதலாவது திட்டத்தில் உள்ள அல்லப்பாளையம், திம்மநாயக்கன்புதூா், அய்யப்பநாயக்கன்பாளையம், மொண்டிபாளையம், தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திக்கடவு 2-ஆவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.