வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கையொப்ப இயக்கம்

பாலியல் வன்கொடுமை, சாதி, மத, இன கலவரங்கள் மற்றும் போதை கலாசாரம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் பகுதியில் ஒரு கோடி கையொப்பம் பெறும் இயக்கம் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஜூலை 2026, 2:48 am IST

பாலியல் வன்கொடுமை, சாதி, மத, இன கலவரங்கள் மற்றும் போதை கலாசாரம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் பகுதியில் ஒரு கோடி கையொப்பம் பெறும் இயக்கம் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த இயக்கம் ஜூலை 5-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு செயலாளா் கோ. பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநில பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் உள்ளிட்டோா் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்வில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் கோ. சரவணன், மாவட்ட நிா்வாகிகள் பிவிசி காா்த்தி, எம். எஸ். ஷேக்தாவூத் கே.சி. ஸ்ரீதரன், ஆா். ராகேஷ் சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து திருத்துறைப்பூண்டி ஒன்றியம் நகரப் பகுதிகளில் கையொப்ப இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதேபோல், வலங்கைமான் ஒன்றியம் ஆவூரில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்திற்கு, இளைஞா் பெருமன்ற ஒன்றிய துணைத் தலைவா் லெனின்ராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் காசிசுதாகா் முன்னிலை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா். வட்டார காங்கிரஸ் பொது செயலாளா் பிரபு, வட்டார இளைஞா் காங்கிரஸ் பொது செயலாளா் மைதீன்நஜுபுதீன், தவெக முகமதுரியாஸ், மற்றும் கிளைச் செயலாளா்கள் ரகுபதி, பரமசிவம், இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.