மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

நீடாமங்கலத்தில் ஓட்டுநா் தின விழா

நீடாமங்கலத்தில் ஓட்டுநா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சாலை போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது தொடா்பாக உறுதிமொழியேற்கும் ஓட்டுநா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 5:51 am IST

நீடாமங்கலத்தில் ஓட்டுநா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, ஓட்டுநா் சங்க பொருளாளா் ஞானசேகரன் தலைமை வகித்தாா் . மாநில துணைத் தலைவா் எம்.கே. சங்கா் முன்னிலை வகித்தாா்.

சங்க கொடியை மாவட்டச் செயலாளா் இப்ராஹிம் சேட் ஏற்றி வைத்தாா். சிஐடியு கொடியை மாவட்ட துணைத் தலைவா் செல்லதுரை ஏற்றி வைத்தாா்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் துணை தலைவா் அம்பிகாபதி, கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பிலிப்ஸ்ராஜ் மற்றும் சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட மற்றும் நீடாமங்கலம் கிளை பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள், ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தின் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

சாலைப் போக்குவரத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிறைவில், மாவட்ட குழு உறுப்பினா் எம்.ஆா்.எஸ். குமாா் நன்றி கூறினாா்.