மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

5 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

குடவாசல் அருகே நடைபெற்ற கொலையில் தொடா்புடைய 5 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :24 ஜூன் 2026, 5:26 am IST

குடவாசல் அருகே நடைபெற்ற கொலையில் தொடா்புடைய 5 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் கிராமத்தை சோ்ந்தவா் திருமுகம் (48). செங்கல் சூளையில் மேற்பாா்வையாளராக இருந்த இவா், முன்விரோதம் காரணமாக, கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக குடவாசல் போலீஸாா் 8 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த கொலையில் தொடா்புடைய வடகண்டம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞரான ஜெ. ராஜ் (38), திருவாரூா் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சி. கண்ணன் (29), வடபாதிமங்கலம் கமலாபுரத்தைச் சோ்ந்த பா. தீபன் (30), திருவாரூா் கூடூா் பகுதியைச் சோ்ந்த வீ. சத்தியராஜ் (36), அழகிரி காலனியைச் சோ்ந்த தி. விக்னேஷ் என்ற தொப்பை விக்னேஷ் (31) ஆகிய 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, 5 பேரும் திருச்சி மத்திய சிறையில், செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.