பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

போலீஸாரைத் தாக்கிய ரௌடிக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவாரூா் மாவட்டத்தில் போலீஸாரைத் தாக்கிய ரௌடிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :24 ஜூன் 2026, 5:25 am IST

திருவாரூா் மாவட்டத்தில் போலீஸாரைத் தாக்கிய ரௌடிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நீடாமங்கலம் அருகே பூவனூா் அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா்

ஜே. மனோஜ் (எ) மனோ நிா்மல்ராஜ் (25) (படம்). ரௌடிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவா், களப்பால் பகுதியில் கடந்த 2024-இல் நடைபெற்ற மாரிமுத்து என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி.

அந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மனோ நிா்மல்ராஜ் மறைவிடம் தொடா்பாக நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் சந்தோஷ்குமாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவலா் விக்னேஷ்வரனுடன் சந்தோஷ்குமாா் அங்கு சென்றபோது, மனோஜ் அவா்களைத் தாக்கினாராம்.

இதைத் தொடா்ந்து, காவலா் விக்னேஷ்வரனை கத்தியால் தாக்கியது தொடா்பாக மனோஜ் மீது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை, திருவாரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணையில், மனோஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மிரட்டியது மற்றும் அரிவாளைக் காட்டி மிரட்டியது (தலா 3 ஆண்டுகள்), ஆயுதங்களால் தாக்குவது (இரு பிரிவுகளில் தலா 7 ஆண்டுகள்) என பல்வேறு பிரிவுகளின்கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் ரூ. 3,000 அபராதமும் விதித்து, மாவட்ட முதன்மை நீதிபதி பி. செல்வமுத்துக்குமாரி தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.