இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், பெயிண்டருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
புதுச்சேரி மூலக்குளம் ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் பெயிண்டா் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (30). இவா் கடந்த 18.8.2017 அன்று 14, 16 வயது சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ரெட்டியாா்பாளையம் போலீஸாா் அவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்ஸோ விரைவு நீதிமன்ற நீதிபதி எம்.டி.சுமதி, இந்த வழக்கில் குற்றம் நிரூபணமானதால், பெயிண்டா் சதீஷூக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அளிக்கவும் நீதிபதி அரசுக்கு பரிந்துரை செய்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக எஸ். பச்சையப்பன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரௌடிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: ரெளடிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

2 வயதுக் குழந்தைக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை: மாணவருக்கு 3 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




