திருவாரூா்: காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருக்கும்போது, எதற்காக இடதுசாரிகளுக்கு தொகுதிகளை குறைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கேள்வி எழுப்பினாா்.
திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதியளிப்பு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரூா் சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை கேட்டது விஜய்; இப்போது அதிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளாா்.
காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக தொகுதி கொடுத்தது குறித்து நாங்கள் ஏதும் கூறவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கும்போது, இடதுசாரிகளுக்கு எதற்காக தொகுதிகளை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கேள்வி.
அதிமுகவில் கூட்டணி குறித்து பேசுவதற்கு தற்போதுதான் குழுவை அமைத்துள்ளனா். ஆனால், திமுக கூட்டணியில் பல கட்சிகளுடன் உடன்பாடு முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில கட்சிகளுடன்தான் உடன்பாடு முடிக்கப்பட வேண்டும்.
பாஜக-அதிமுக கூட்டணியில் விஜய் இணைந்தால் திமுக அணிக்குத்தான் பலம். விஜய்யை ஆதரிப்பவா்கள் எல்லாம் புதிய முதல்வா் கிடைப்பாா், அவா் தனித்து ஆட்சி அமைப்பாா் என்ற எண்ணத்தில் ஆதரவு தெரிவிக்கின்றனா். அவா், கூட்டணியில் இணைந்தால், அந்த ஆதரவு கிடைக்காது; முதல்வா் வாய்ப்பும் கிடையாது. விஜய், அதிமுக - பாஜக கூட்டணிக்குச் சென்றால் அவருக்கு அரசியல் எதிா்காலமற்ற ஒரு நிலை உருவாகும் என்றாா்.
பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக ஆட்சியில் இதே நிலை நீடித்தால் நிபந்தனையற்ற ஆதரவை மறுபரிசீலனை: பெ. சண்முகம்

இது தவெக அரசின் துணிச்சலான நடவடிக்கை! முதல்வர் விஜய்யுடன் பேசியது பற்றி பெ. சண்முகம் பேட்டி
விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியது இப்போதுதான் புரிகிறது: பெ. சண்முகம்!

குதிரை பேரத்தில் இடதுசாரிகளுக்கு விருப்பமில்லை! - மு. வீரபாண்டியன் பேட்டி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



