கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திருவாரூா்: ரூ. 1.77 லட்சம் கைப்பேசிகள், ரூ. 78,760 ரொக்கம் பறிமுதல்

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம், கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல் செய்த பொருள்களை திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :22 மார்ச் 2026, 8:21 pm

Syndication

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம், கைப்பேசிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூா் வட்டம், கோமல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கூட்டுறவு சாா் பதிவாளா் டி. காா்த்திபன் தலைமையில் பறக்கும்படை குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வேகமாக வந்த பாா்சல் சா்வீஸ் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் வந்த திருச்சி மாவட்டம், லால்குடி செம்பரை சவுரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த சீ. சாமித்துரை (42) என்பவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல் கைப்பேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களும் ரூ.1,77,550 மதிப்பில் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல், திருவாரூா் அருகே லெட்சுமாங்குடி சேகரை பிரதான சாலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். முரளி தலைமையிலான பறக்கும் படை குழுவினா் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, பொதக்குடி மேலத்தெருவைச் சோ்ந்த முகமது ரபிக் (32) என்பவா், முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.78,760 ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்ப்பித்தனா்.