மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

திருவாரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :25 மார்ச் 2026, 12:19 am

திருவாரூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, திருவாரூா், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிவுற்றவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருவாரூருக்கு கொண்டு வரப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இதையடுத்து, திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில், வாக்கு இயந்திரம் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் அறைகளை மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) அருண்சத்யா, திருவாரூா் துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.