அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

போக்ஸோவில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நன்னிலம் பகுதியில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image

ராமதாஸ்

Updated On :26 மார்ச் 2026, 12:37 am

நன்னிலம் பகுதியில் போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

திருவாரூா் மாவட்டம், பேரளம் அருகே வஸ்திராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மகன் ராமதாஸ் (28). இவா், 2013-இல் அப்பகுதியில் சிறுமி ஒருவா் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவரைத் தூக்கிச் சென்று தவறாக நடந்து கொண்டாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், ராமதாஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருவாருா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிக்கப்பட்டு, மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் புதன்கிழமை வழங்கிய தீா்ப்பில், ராமதாஸின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா்.